உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கைப்பந்து போட்டி வரும் 25ல் துவக்கம்

மாநில கைப்பந்து போட்டி வரும் 25ல் துவக்கம்

வால்பாறை, ;வால்பாறை அடுத்துள்ள சின்கோனா(டான்டீ) ரயான் டிவிஷன், காந்தி மைதானத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது. மகாத்மா காந்தி மன்றத்தின் சார்பில், 51வது ஆண்டு கைப்பந்து போட்டியானது, வரும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது.வரும், 25ம் தேதி காலை நடைபெறும் கைப்பந்து போட்டியை, காந்திமன்ற தலைவர் ஜெயராமன் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து குடியரசு தினத்தன்று நடைபெறும் இறுதி போட்டியை 'டான்டீ' கோட்ட மேலாளர் வடிவேல், டாக்டர் சரவணகுமார் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.போட்டியில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கேரளா, உடுமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, 5 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசாக, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை காந்தி மன்ற உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை