மேலும் செய்திகள்
காது கேளாதோர் சங்கம் ஆர்ப்பாட்டம்
23-Sep-2026
கோவை: பீளமேடு, லால்பகதூர் காலனியை சேர்ந்தவர் அசோக்குமார். மனைவி கவுசல்யா தேவி. மகன் அகிலன், 15, அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று, அகிலனை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பிற்பகல் கவுசல்யா தேவி வீட்டுக்கு வந்த போது, அகிலன் துாக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதை கண்ட கவுசல்யா தேவி கதறி அழுதார். பள்ளியில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக, அகிலன் தற்கொலை செய்து கொண்டதாகவும், பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும், அகிலன் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்றிரவு பீளமேடு ஸ்டேஷனில் புகார் அளித்து முற்றுகையிட்டனர். பள்ளி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறினர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால், கலைந்து சென்றனர்.
23-Sep-2026