உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை நகராட்சி சுகாதாரத்துறை தீவிரம்

தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை நகராட்சி சுகாதாரத்துறை தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு முன், தெருநாய்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,360 நாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆனால், தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி போன்ற பணிகள் பெரிதளவில் மேற்கொள்ளப்படவில்லை. பொதுமக்கள் அளிக்கும் புகாரின் படி, அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இதனால், கணக்கெடுப்புக்கு நடத்திய ஆண்டினை ஒப்பிடுகையில், தற்போது, தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என, கருதப்படுகிறது.இந்நிலையில், தற்போது, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போன்றவை செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 500 நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில், திருப்பூர் தங்கம் மெமோரியல் டிரஸ்ட் ஈடுபட்டுள்ளது. வாரந்தோறும், 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, திருப்பூர் எடுத்துச் செல்லப்பட்டு தடுப்பூசி மற்றும் கருத்தடை பணிகள் மேற்கொள்ளப்படவும் உள்ளது.அதன்படி, நேற்று, 21 நாய்கள் பிடிக்கப்பட்டன. கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டப்பின், அதன் காதில், சிறிய அளவிலான அடையாளம் ஏற்படுத்தி, மீண்டும் நகராட்சி பகுதியில் விடப்படும்.நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:குறிப்பாக, பெண் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒரு நாய்க்கு, 1,650 ரூபாய் செலவிடப்படுகிறது.அவ்வகையில், நகராட்சிக்கு உட்பட்ட 2, 9 மற்றும், 10 வது வார்டில் இருந்த, 21 நாய்கள் பிடிக்கப்பட்டன. அந்த நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தி, மீண்டும் அந்தந்த பகுதியில் விடப்படும்.இதேபோல, அனைத்து நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி