பங்கு வர்த்தக முதலீடு என ரூ.17 லட்சம் நுாதன மோசடி
கோவை; பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, 17 லட்சம் ரூபாயை மோசடி செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.கோவை, கணபதியை சேர்ந்தவர் பாபுரி அஞ்சி பாபு, 35. இவரது வாட்ஸாப் எண்ணுக்கு, ரவி ஷர்மா என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது, வாட்ஸாப் குழு வாயிலாக ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் பெறலாம் என, கூறி உள்ளார். நம்பிய பாபுரி அஞ்சி பாபு, 17.13 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.முதலில் சிறிது லாபம் கிடைத்தது. அதன்பின் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. மேலும், அவரது கணக்கிலிருந்து முழு பணமும் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, அவர்களிடம் கேட்டபோது, மேலும் பணத்தை முதலீடு செய்ய அறிவுறுத்தினர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாபுரி அஞ்சி பாபு, கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.