உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாசஞ்சர் ரயில் மீது கல்வீச்சு

பாசஞ்சர் ரயில் மீது கல்வீச்சு

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் மீது கல் வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மேட்டுப்பாளையம் இடையேயான பாசஞ்சர் ரயில் நேற்று காலை, 8.40 மணிக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் புதுப்பாளையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் ரயில் மீது கல் வீசினார்.ரயிலின் மேல் பகுதியில் பட்டு கீழே விழுந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. கல் வீச்சில் ஈடுபட்ட நபரின் வயது சுமார், 30 இருக்கும் என, ரயிலில் பயணம் செய்த பயணியர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை