ரயில் மீது கல்வீச்சு; போலீசார் விசாரணை
கோவை; கன்னியாகுமரி - புனே இடையே, கோவை வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. தொடர்ந்து புனேவுக்கு புறப்பட்டது. வடகோவை ரயில்வே ஸ்டேஷன் தாண்டிய போது, ரயிலில் ஏ.சி., பெட்டியின் மீது கல் விழுந்தது. இதில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற ரயில்வே பாதுகாப்பு படையினர், விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விசாரித்தனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.