உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று நாட்களாக தொடரும் ஸ்டிரைக்; விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு

மூன்று நாட்களாக தொடரும் ஸ்டிரைக்; விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு

சோமனூர்; கோவை, திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி வேலை நிறுத்தம் மூன்று நாட்களாக தொடர்வதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு வேண்டும், ஆண்டு தோறும் சாதா விசைத்தறிக்கு உயர்த்தப்படும் ஆறு சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள், கடந்த, 19 ம்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களாக, 1.5 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாததால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.மூன்று நாட்களில், பல லட்சம் மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த, சார்பு தொழில்கள் செய்வோரிடம், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். வரும் நாட்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள், விசைத்தறியாளர்கள் பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க, சட்டசபை சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதற்கிடையில், கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் வரும், மார்ச் 25 மற்றும் 26 ம் தேதி, பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாகவும், அதற்காக, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக கடிதங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை