பக்கவாதம் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்
கோவில்பாளையம்; பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில், 2,000 பேர் பங்கேற்றனர்.கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 28வது ஆண்டாக மராத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.கோவில்பாளையத்தில் உள்ள கே.எம்.சி.எச்., மருத்துவமனை முன், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கொடியசைத்து மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்ல. பழனிச்சாமி தலைமை வகித்தார். இயக்குனர் தவமணி பழனிச்சாமி, செயல் இயக்குனர் அருண் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்கவாதம் குறித்த விழிப்புணர்வுக்காக மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. பக்கவாத அறிகுறி தெரிந்த உடனே சிகிச்சை அளித்தால் 100 சதவீதம் குணப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.கல்லுாரி மாணவ, மாணவியர், மருத்துவமனை ஊழியர்கள் என 2,000 பேர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். கோவில்பாளையத்தில் துவங்கி, குரும்பபாளையம் வழியாக 18 கி.மீ., துாரம் சென்று மராத்தான் ஓட்டம் முடிவடைந்தது. இதில் 60க்கும் மேற்பட்டோருக்கு பரிசும், மற்றவர்களுக்கு, சான்றிதழும் வழங்கப்பட்டது.