மேலும் செய்திகள்
அஞ்சல் ஊழியர்கள் சங்கம் வாயிற்கூட்டம்
15-Feb-2025
பொள்ளாச்சி; நாடு முழுவதும், அஞ்சல் துறையில், தற்போது, 19,500 பட்டுவாடா அலுவலகங்கள் செயல்படுகிறது. இதனை மாற்றும் விதமாக, 'சுதந்திரமான டெலிவரி மையம்' மற்றும் 'மெஷினைஸ்டு பீட் டெலிவரி' என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத புதிய திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது.மேலும், பாரம்பரிய தபால் துறையினை, தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி, தபால் துறை மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்தது.அதன் ஒரு பகுதியாக, நேற்று முதல், தபால் ஊழியர்கள் கோரிக்கை அடங்கிய அட்டை அணிந்து, பணி செய்யும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அவ்வகையில், பொள்ளாச்சி கோட்டத்தில், தலைமை தபால் அலுவலகம் மற்றும் கிளை தபால் நிலையங்களில் உள்ள ஊழியர்கள், கோரிக்கை அடங்கிய அட்டை அணிந்து பணியாற்றினர்.
15-Feb-2025