மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சியில், பிளஸ் 1 படித்து வந்த, 17 வயது மாணவி, வாலிபரை காதலித்து வந்தார். இந்நிலையில், அந்த வாலிபர் காதலிக்கவில்லை எனக்கூறியதால், மொபைல்போனில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மன உளைச்சல் அடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.