உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுாரில் மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு

சூலுாரில் மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை; சூலுார், அனுக்ரஹா மந்திர் பள்ளியில் மாணவர் மன்ற நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நடந்தது. கருமத்தம்பட்டி, டி.எஸ்.பி., தங்க ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவர்களிடையே பேசிய அவர், ''ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி, நேரத்தை வீணாடிக்காமல் இருப்பது போன்ற பண்புகள், வாழ்வில் வெற்றியை தேடித்தரும்,'' என்றார். பள்ளி தாளாளர் ேஷாபா, சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முதல்வர் உமா மகேஷ்வரி, துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை