மேலும் செய்திகள்
கே.எல்.என்., கல்லுாரி வளாகத் தேர்வு
19-Mar-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., கால்வாயில் நீரில் அடித்துச் செல்லப்பட்டகல்லுாரி மாணவரை, கோமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.சேலம் மேட்டூரை சேர்ந்தவர் தரணிதரன்,18. இவர், பொள்ளாச்சியில் உடுமலை ரோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லுாரி விடுதியில் தங்கி படித்த தரணிதரன் உள்ளிட்ட, எட்டு மாணவர்கள், நேற்று முன்தினம் கெடிமேடு பி.ஏ.பி., கால்வாயில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது, நீச்சல் தெரியாத தரணிதரன், நீரில் மூழ்கினார். தனுஷ் என்ற மாணவர் அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை, கோமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.
19-Mar-2025