உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் மாணவர்கள் கலந்துரையாடல்

கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் மாணவர்கள் கலந்துரையாடல்

கோவை; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், மாணவர்களுடன் கலந்துரையாடும், அறிவுசார் புத்தாக்க பயிற்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.ஐ.பி.எம்., நிறுவனத்தின் கற்றல் மற்றும் செயல்பாட்டு பிரிவு அதிகாரி சந்தீப் மகாவி, 66 டிக்ரீஸ் நிறுவன இயக்குனர் சார்னா திரிவேதி, கே.பி.எம்.ஜி., அதிகாரி சாஹில் நாயர், குயின்பே டெக்னாலஜிஸ் சீனியர் பிசினஸ் பார்ட்னர் சுஜிதா என, 15 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.இந்நிகழ்வில், வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள், வேகமாக முன்னேறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுதல் போன்ற ஆலோசனைகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.கல்லுாரி நிறுவனத் தலைவர் பொங்கலுார் பழனிசாமி, தலைவர் பைந்தமிழ்பாரி, துணைத்தலைவர் இந்து, தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ