மாணவர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி : தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழுக் கூட்டம் நடந்தது.தலைமையாசிரியர் கணேசன், தலைமை வகித்தார். தொடர்ந்து, பெண் குழந்தைகள் பள்ளி மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புடன் இருத்தல், உயர்கல்வி தேர்வு எழுதுதல், தேர்வு பயம் நீங்க, '14417' என்ற எண்ணில் ஆலோசனை பெறுதல், பொதுவான பிரச்னைகளுக்கு '1098' என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்து புகார் தெரிவித்தல் குறித்து தெரிவிக்கப்பட்டது.மேலும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், பள்ளியில் உள்ள 'மாணவர் மனசு பெட்டி' திறக்கப்பட்டது. அதில் உள்ள மனுக்கள், வாசித்து பதிவு செய்யப்பட்டது.குறிப்பாக, விளையாடுவதற்கு பெரிய விளையாட்டு மைதானம்; 'ஹைடெக் லேப்', கம்ப்யூட்டர், புரஜெக்டர் பயன்பாட்டிற்கு தனி கட்டடம்; தனியான சமையல் அறை உள்ளிட்ட தேவைகள், கோரிக்கைகளாக இடம்பெற்றிருந்தன. இது குறித்து, துறை ரீதியான அதிகாரிகளிடம் தெரிவித்து, தீர்வு காண்பது எனவும், தெரிவிக்கப்பட்டது.