உள்ளூர் செய்திகள்

மாணவன் தற்கொலை

தொண்டாமுத்தூர்; முட்டத்துவயலை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் பிரனீஷ்,16. மத்வராயபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரனீஷ், பள்ளியில் உள்ள ஒருவரை குறித்து தவறாக மேசேஜ் அனுப்பியுள்ளார். தான் செய்த விஷயம் வெளியே தெரிந்து விட்டது என்ற மன உளைச்சலில் பிரனீஷ், கடந்த, 31ம் தேதி, கரையான் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.நேற்று முன்தினம், சிகிச்சை பலனின்றி பிரனீஷ் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !