அவனியின் மராத்தான் மாணவர்கள் ஆர்வம்
கோவை: கோவை அவனி மையப் பள்ளி சார்பில் நடந்த, 'அவனியின் மராத்தான் 2025' போட்டியில் மாணவர்கள், பெற்றோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். 'ஆரோக்கியத்தின் பாதையில் செல்வோம்' என்ற தலைப்பில் நடந்த இப்போட்டி, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம், உடல் நலனில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது. ஜூம்பா உடற்பயிற்சியுடன் மராத்தான் துவங்கியது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 1 கி.மீ., 5 வயதுக்கு அதிகமான குழந்தைகளுக்கு, 1 கி.மீ., 3 கி.மீ., மற்றும், 5 கி.மீ., ஓட்டம், பெற்றோர் மற்றும் பெரியவர்களுக்கு, 3 கி.மீ., 5 கி.மீ., ஓட்டம் இடம்பெற்றது. மாணவர்கள், பெற்றோர் உற்சாகமுடன் பங்கேற்றனர். மராத்தான் முடித்த அனைவருக்கும் பதக்கங்கள், மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு,கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான உடல்நல துணை நிறுவனமாக இருந்தஜெனிசிஸ் முக்கிய ஆதரவு வழங்கியதாக, பள்ளி நிர்வாக தலைவர்கள் தெரிவித்தனர்.