உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலைத்திருவிழாவில் மாணவர்கள் நடனம்

கலைத்திருவிழாவில் மாணவர்கள் நடனம்

வால்பாறை; அரசு பள்ளிகளுக்கு இடையே நடந்த கலைத்திருவிழாவில், மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். வால்பாறை குறுவள மையம் அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், 49 அரசு துவக்க பள்ளிகளை சேர்ந்த, 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கலைவிழாவை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் துவக்கி வைத்தார். பாட்டு, மாறுவேடம், நடனம், ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஆசிரியர் பயிற்றுனர்கள் செந்தில்குமார், ரம்யா, பிரபா மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி