மீன் அமிலம் தயாரிக்க மாணவர்கள் செயல்விளக்கம்
பொள்ளாச்சி; பல்கலை இறுதியாண்டு இளநிலை வேளாண் மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில், களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து, 65 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பயிற்சி, விவசாய நிலங்களை நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல், நோய் மற்றும் பூச்சி தாக்கம் குறித்த ஆய்வுகள், பல்கலையின் புதிய ரகங்களின் பயன்பாடு, வேளாண் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில், எஸ்.பொன்னாபுரத்தில், வேளாண் கழிவுகள் மற்றும் உதிர்ந்த இலைகளை மக்கச் செய்தல், நோய், பூச்சி தடுப்பதற்கான இ.எம்., கரைசல் தொழில்நுட்பம், இயற்கை முறையில் மண்ணின் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் உயிர்ச்சத்தின் அளவை அதிகரிக்கும் மீன் அமிலம் தயாரிக்க செயல் விளக்கம் அளித்தனர். மேலும், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.