மேலும் செய்திகள்
கல்லுக்குழி நீரில் மூழ்கி ஒருவர் பலி
08-Mar-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சட்டக்கல்புதூரில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், மண் மாதிரி சேகரிப்பு குறித்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் காண்பித்தனர்.கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி, சட்டக்கல்புதூர் கிராமத்தில், கோவை வேளாண் பல்கலை மாணவர்கள், கிராம தங்கள் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர். அப்பகுதி விவசாயிகளுக்கு, மண் மாதிரி சேகரிப்பு முறைகளை செயல்விளக்கத்துடன் காண்பித்தனர்.இதில், மண் சேகரிப்பு செய்ய எவ்வளவு ஆழத்தில் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கரில் எத்தனை இடத்தில் மண் எடுக்க வேண்டும். எங்கு மண் எடுக்க வேண்டும். எங்கு எடுக்கக்கூடாது எனவும், விரிவாக எடுத்துரைத்தனர்.மண் பரிசோதனையின் போது, மண்ணில் உள்ள பலவிதமான சத்துக்கள் அளவு தெரியவரும். தேவைக்கு ஏற்ப, பேரூட்டம், நுண்ணுாட்டம் அளிக்கலாம். இதனால் காலநிலைக்கேற்ப பயிர் செய்து பயன்பெறலாம், என, வேளாண் மாணவர்கள் தெரிவித்தனர்.
08-Mar-2025