உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடகளத்தில் அசத்திய மாணவர்கள்

தடகளத்தில் அசத்திய மாணவர்கள்

கோவை: கோவை சகோதயா தடகள விளையாட்டு போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியை துவக்கி வைத்தார். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் 1,500 மீ., ஓட்டத்தில், யுவபாரதி பப்ளிக் பள்ளியின் ஆதவ், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் துருவன், ரூபக் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட 1500 மீ., ஓட்டத்தில், விவேகானந்தா அகாடமி சீனியர் பள்ளியின் சஷ்வந்த், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் தனேஷ், தர்ஷவ் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் 1,500 மீ., ஓட்டத்தில், ஸ்மார்ட் மார்டன் பள்ளியின் அபர்னா, சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் சாத்விகா நிவாஷினி, ஐஸ்வர்யா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் குண்டு எறிதல் போட்டியில், யுவபாரதி பப்ளிக் பள்ளியின் ரோஹித், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் இளங்கதிர், ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியின் சஞ்ஜிவ், முதல் மூன்று இடங்கள் தக்க வைத்தனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் வட்டு எறிதல் போட்டியில், ஸ்மார்ட் மார்டன் பள்ளியின் சிவாரதீஷ், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியின் ஹரிஷாந்த், ரயில்வே உயர்நிலைப் பள்ளியின் மணிகா மோகன் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியின் அஜய் வெங்கட், ஆதர்ஷ் வித்யாலயா சர்மான், சச்சிதானந்தா பள்ளியின் ரூபக் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் 1,500 மீ., ஓட்டத்தில் சாகர் இன்டர்நேஷ்னல் பள்ளியின் சாதனா, சச்சிதானந்தா ஜோதி நிகேதன் மாணவி சஷ்ரிதா, சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியின் ரிதிஷா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் நீளம் தாண்டுதலில், யுவபாரதி பப்ளிக் பள்ளியின் அஷ்விகா, ஸ்மார்ட் மார்டன் பள்ளியின் பிரணவி, சாகர் இன்டர்நேஷ்னல் பள்ளியின் மாதினி ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 12 வயதுக்கு உட்பட்ட மாணவர் குண்டு எறிதல் போட்டியில், விவேகானந்தா அகாடமி பள்ளியின் பிரணவ், ஸ்ரீ தயானந்தபுரி மாடல் பப்ளிக் பள்ளியின் மோஹித், யுவபாரதி பப்ளிக் பள்ளியின் தர்ஷன் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை