மேலும் செய்திகள்
ராஜிவ்காந்தி பொறியியல் கல்லுாரியில் கலாசார விழா
07-May-2025
கோவை,; பிச்சனுார், ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் 16வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்களின் செயலாளர் துர்கா தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் மனோகரன், 2024--25ம் கல்வி ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினர் கோவை அக்வாசப் பொறியியல் நிதி, நிர்வாக துணைத் தலைவர் நரேந்திரன், 2024--25ம் கல்வி ஆண்டின் சிறந்த மாணவருக்கான விருதை, மின்னணுவியல் துறை மாணவி கடம்மனிஷாவிற்கு வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் சிறந்த மாணவர்களுக்கு, துறைவாரியாக பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து நடந்த விளையாட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சர்வதேச தடகள வீரர் பிரதீப் ராஜ்குமார், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
07-May-2025