உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாதித்த மாணவர்களுக்கு பள்ளி விழாவில் கவுரவம்

சாதித்த மாணவர்களுக்கு பள்ளி விழாவில் கவுரவம்

அன்னூர்: அன்னூர், அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 76 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார். விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சியில், நாட்டுப்புறப் பாடல், பரதநாட்டியம், கும்மி என அசத்தினர். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி கிருஷ்ணதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ