மேலும் செய்திகள்
விடுமுறை அறிவிப்பு; பள்ளிகளில் வகுப்புகள்
14-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரையாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரயைாண்டுத்தேர்வு கடந்த ஒரு வாரமாக நடைபெற்றன. தேர்வுகள் நேற்று நிறைவடைந்தன. அதே போன்று, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாட தேர்வுகள் நேற்று நிறைவு பெற்றன.தேர்வு முடிந்து, இன்று முதல், ஜன.,1ம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், இரண்டாம் பருவ பாட தேர்வு நிறைவு செய்து விடுமுறை விடப்பட்டதையடுத்து, பலுான்களை பறக்க விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
14-Dec-2024