உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய நினைவுகளால் மகிழ்ந்த மாணவர்கள்

பழைய நினைவுகளால் மகிழ்ந்த மாணவர்கள்

கோவை; கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு பிளஸ்2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது. 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், முத்து விழாவாக நடந்த சந்திப்பில், இந்தியாவின் பல்வேறு பகுதிகள், வெளிநாடுகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியில் 1995ல் பாடங்கள் நடத்திய ஆசிரியர்களும் பங்கேற்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் பள்ளிகால பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். பள்ளிப்பாடலை அனைவரும் ஒன்றிணைந்து பாடியது, உணர்வுப்பூர்வமான தருணமாக இருந்தது. மறைந்த முன்னாள் மாணவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 25 பேருக்கு ஹெட் போன்களை முன்னாள் மாணவர்கள் கதிரவன், குமார், கார்த்திக், ஸ்ரீதர், மோகனசுந்தரம் ஆகியோர் வழங்கினர். அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ