உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபடணும்

புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபடணும்

கோவை; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டில்லிபாபு மற்றும் மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.அவர் தம் உரையில், முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம், மூத்த விஞ்ஞானி ராகேஷ் சர்மா ஆகியோர் டி.ஆர்.டி.ஓ, துறையின் மூலமாக நமது நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை விளக்கினார். மேலும் பேசிய அவர், '' மாணவர்கள் டி.ஆர்.டி.ஓ., துறையின் மூலமாக நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த வேண்டும். புத்தக அறிவுடன் நின்று விடாமல், நவீன மற்றும் எதிர்கால தேவைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளில் தங்களது கவனத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும்'' என்றார்.இந்நிகழ்வில் கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை