திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற அக் ஷரம் இன்டர்நேஷனல் பள்ளி (சிபிஎஸ்இ), ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியநாயகி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அக்: ஷரம் இன்டர்நேஷனல் பள்ளி (சிபிஎஸ்இ): மத்தம்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 76 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இதில், 'எச்' அணியின் ஷர்வீஸ், அஸ்ரித் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி செயலாளர் ரமேஷ், முதல்வர் பாப்பிராய் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 120 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இதில், 'எச்' அணியின் ரித்தீஷ்வர், சஞ்சீவ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி முதல்வர் இந்திரா ரமேஷ் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: துடியலூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 47 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இதில், 'ஏ' அணியின் அனிருத், ஸ்ரீதர் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி முதல்வர் மணிமாறன் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பெரியநாயகி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: வெள்ளானைப்பட்டியில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 475 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இதில், 'எச்' அணியின் முத்துக்குமார், பிரிஜேஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி முதல்வர் அய்யம்மாள் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவர்களின் சிந்தனையாற்றல், பொது அறிவு மற்றும் படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க, 'தினமலர்'சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.