ஏழூர் பிரிவு அருகே மாணவர்கள் அவதி
கிணத்துக்கடவு,: பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு ஏழூர் பிரிவு அருகே, தனியார் பள்ளி முன், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த குறுக்கு பட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.ரோட்டில் வரும் வாகனங்கள், இப்பகுதியில் மெதுவாக சென்று வந்தன. தற்போது, இந்த குறுக்கு பட்டைகள் தடிமன் குறைந்துள்ள நிலையில், வாகனங்கள் வேகமாக செல்கின்றன. மாணவர்கள் ரோட்டை கடக்க அவதிப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளி நேரத்தில் ரோட்டில் வேகத்தடுப்பு வைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.