உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சதுரங்க போட்டியில் சாதித்த மாணவர்கள் 

சதுரங்க போட்டியில் சாதித்த மாணவர்கள் 

கோவை; எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி மற்றும் சி3 டெக் செஸ் அகாடமி சார்பில், பள்ளியின் நிறுவனர் வேலுமணி அம்மாள் நினைவு சதுரங்க போட்டி, பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் தாளாளர் கோபாலகிருஷ்ணன் சதுரங்கப் போட்டியினை துவக்கி வைத்தார். மொத்தம் 143 மாணவர்கள், வயதின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். மொத்தம் ஆறு பிரிவுகளுக்கு, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் செயலாளர் ஜெயகண்ணன், முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் சி3 டெக் அகாடமி தலைமை நடுவர் கணேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி