குவிஸ் போட்டியில் சாதித்த மாணவ மாணவியர்
கோவை; காரமடை, ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'வீக்லி விஸ்டம்' என்னும் தலைப்பில், பள்ளி அளவிலான பொது அறிவு, வினாடி-வினா போட்டி நடந்தது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் இன்டலெக் குவிஸ்ட், நாலேஜ் நாகவுட், ஜிகே ஒடிசி என்னும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொது அறிவு கற்பிக்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு, பல சுற்று தேர்வுகளுக்கு பின், இறுதிச் சுற்றாக, 'வீக்லி விஸ்டம்' பொது அறிவு வினாடி - வினா போட்டி நடந்தது. இறுதிச் சுற்றில், இன்டலெக் குவிஸ்ட் அணி தொடக்க நிலை மற்றும் உயர்நிலை இரு பிரிவுகளிலும் முதல் பரிசை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. தொடக்க நிலை இன்டலெக் குவிஸ்ட் அணியில் ஹனிஷா, நிகிதா, ஜுதிசா மற்றும் உயர்நிலை இன்டலெக் குவிஸ்ட் அணியில் திகாந்த், ஹேம்ராஜ் அத்வைத் நாயர் ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் பாரட்டுச் சான்றிதழை பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி, தாளாளர் சோமசுந்தரம் ஆகியோர் வழங்கினர். பள்ளி முதல்வர் வித்யாகுமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.