உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெற்றோரிடம் ஆசி பெற்ற   மாணவர்கள்

பெற்றோரிடம் ஆசி பெற்ற   மாணவர்கள்

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், பள்ளித்தாளாளர் சாந்திதேவி, பள்ளி நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ரிதன்யா முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சந்திராவதி வரவேற்றார்.கோவை மங்கையர்கரசியார் அறநெறி அறக்கட்டளை வாயிலாக, 10 சிவனடியார்கள் கொண்ட குழுவினரால் தமிழ் முறைப்படி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மந்திரங்கள் ஓதி அம்மமையப்பர் வழிபாடு, அம்மையப்பருக்கு அபிேஷகம், வேள்வி, பெற்றோருக்கு பாத பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர் தங்களுடைய பெற்றோர்களின் பாதங்களுக்கு பூஜை செய்து சந்தனம், குங்குமம் பொட்டிட்டு, போற்றிகள் கூறி மலர் துாவி அர்ச்சனை செய்து ஆராதித்தனர். ஆசிரியர்களுக்கு போற்றிகள் கூறி ஆசிரியர்களின் ஆசி பெற்றனர். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகளை ஏற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி