மேலும் செய்திகள்
மரபணுத்தொகை தரவு பகுப்பாய்வு கைத்திறன் பயிற்சி
24-Oct-2024
கோவை: கோவை, வேளாண் பல்கலையில், உயிரி தொழில்நுட்பத் துறையின் முதுநிலைக் கல்வி 25வது வருடாந்திர ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது.மத்திய அரசின், உயிரி தொழில்நுட்பவியல் துறை கோவையில் உள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மையத்தில் ஆண்டுதோறும், முதுநிலை உயிரி தொழில்நுட்ப பட்டப்படிப்பின் நிலையை அறிய, வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறது.நடப்பாண்டு, மத்திய அரசின் பரிந்துரையாளர்கள் மனோஜ்குமார், வினிதா சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மைய விஞ்ஞானி செல்வி, அவிநாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் கலைச்செல்வி, கார்டெவா வேளாண் அறிவியல் நிறுவனத்தின் தொழில்வல்லுநர் கருணாகரன் ஆகியோர், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினர்.மத்திய அரசின் வாழ்க்கை அறிவியல் துறை திறன் மேம்பாட்டுக் கவுன்சில் முதுநிலை இயக்குநர் அன்ஷுல் சக்சேனா, மாணவர்களுக்குப் பயிற்சி அட்டவணையை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகக் கூறிநார்.வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதன் முக்கியத்துவம், மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில், ஆய்வுப் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல ஊக்குவித்தல் குறித்துப் பேசினார்.இந்தக் கூட்டம் குறித்த ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளை, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையிடம், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்க உள்ளனர்.கூட்டத்தில், தாவர உயிர் தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறைத் தலைவர் அருள்,முதுகலை கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24-Oct-2024