அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்க ஆய்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு தனியாக கட்டப்பட்டு அதற்காக தனியாக ஒரு நுழைவுவாயில் அமைக்கப்பட்டது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அருகே, ரோட்டில் செல்லும் கனரக வாகனங்களால், மருத்துவமனைக்கு வருவோர் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகியுள்ளது.இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும், என, அரசு மருத்துவமனை நிர்வாகம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. மேலும், நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நோயாளிகள நலச்சங்கம் சார்பிலும் வேகத்தடை அமைக்க மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள மூன்று கேட்களில், இரண்டு கேட் அருகே வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின், வேகத்தடை அமைக்கப்படுமென அதிகாரிகள் உறுதியளித்தனர்.