உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சப்-ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஆக., 2ம் தேதி நடக்கிறது தேர்வு

சப்-ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஆக., 2ம் தேதி நடக்கிறது தேர்வு

கோவை; தேசிய அளவிலான சப்- ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலத்தில் வரும் ஆக., 21 முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. இதில், பங்கேற்பதற்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு திருநெல்வேலியில் வரும், 4, 5 தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் இருந்து பங்கேற்பதற்காக, கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் (சி.டி.எப்.ஏ.,) தகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆக., 2ம் தேதி க.க.சாவடியில் உள்ள எஸ்.என்.ஜி.சி.கல்லுாரி மைதானத்தில் வீரர்கள் தேர்வு நடக்கிறது. இதில், பங்கேற்போர் ஆதார் அட்டை, பிறந்த தேதிக்கான ஆவணங்களுடன் வர வேண்டும். மேலும் விபரங் களுக்கு, 98657 35657, 97876 01784, 96292 00765 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சி.டி.எப்.ஏ., செயலாளர் அனில்குமார் தெரி வித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி