உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுபலட்சுமி அம்மாளின் சுயசரிதை நூல் வெளியீடு

 சுபலட்சுமி அம்மாளின் சுயசரிதை நூல் வெளியீடு

வடவள்ளி: பாரதியார் பல்கலையில், மகாகவி பாரதியார் உயராய்வு மையம் மற்றும் ஸ்பாரோ பெண்கள் ஆவண காப்பகம் இணைந்து, 'என் சுயசரிதை- சகோதரி ஆர்.எஸ்.சுபலட்சுமி அம்மாள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. மகாகவி பாரதியார் உயராய்வு மையம் மற்றும் ஸ்பாரோ பெண்கள் ஆவண காப்பகம் இணைந்து, சுதந்திரப் போராட்ட காலத்தில், தான் கற்ற கல்வி மூலம், பெண்கள் கல்வி கற்க பெரும்பாடுபட்ட சுபலட்சுமி அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை, ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாக்கிய நூல் வெளியீட்டு விழா, பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, மகாகவி பாரதியார் உயராய்வு மைய இயக்குனர் சித்ரா தலைமை வகித்து, 'என் சுயசரிதை- சகோதரி ஆர்.எஸ்.சுபலட்சுமி அம்மாள்' என்ற நூலின் தமிழ் பதிப்பை வெளியிட்டார். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பெற்றுக்கொண்டார். இந்நூலின் ஆங்கிலப் பதிப்பை, பேராசிரியர் சங்கமித்ரா வெளியிட, பேராசிரியர் நாகராஜ் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ