மேலும் செய்திகள்
விதைகள் வழங்கல்
13-Dec-2024
ஆனைமலை, ; ஆனைமலை அருகே காளியாபுரத்தில், அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ஆனைமலை வட்டார தோட்டக்கலைத்துறையின் கீழ், தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் -- 4, ஆழியாறு வடிகால் நிலப்பகுதிக்கான திட்டத்தில் காளியாபுரம் கிராமம் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் முதற்கட்டமாக அரசு திட்டங்கள் விழிப்புணர்வு கூட்டம், காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவில் அருகே நடந்தது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று அந்தந்த துறைகளில் உள்ள அரசு மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு விளக்கினர்.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் பேசுகையில், ''நீர்ப்பாசன திட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பாக, தென்னை தோட்டத்தில் ஊடுபயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், ஜாதிக்காய் மற்றும் வாழைக்கன்றுகள், உயிர் உரங்கள் மற்றும் ரசாயன உரங்கள் மானியத்தில் வழங்கப்படும்.இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில், நாற்றுகள், உரங்கள் வினியோகிக்கப்படும். விவசாயிகள், தங்களது வருவாய் ஆவணங்களை கொண்டு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறறலாம்,'' என்றார்.
13-Dec-2024