உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிக் தொழிலாளர்கள் இ- -ஸ்கூட்டர் வாங்க மானியம்

கிக் தொழிலாளர்கள் இ- -ஸ்கூட்டர் வாங்க மானியம்

மேட்டுப்பாளையம்; நலவாரியத்தில் பதிவு பெற்ற 2 ஆயிரம் 'கிக்' தொழிலாளர்கள் இ--ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.கோவை தொழிலாளர் துறை உதவி கமிஷனர், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டாயுதம் கூறியிருப்பதாவது:- உணவு மற்றும் வர்த்தக பொருட்களை டெலிவரி செய்யும் 'கிக்' தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மாத ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.தற்போது கோவை மாவட்டத்தில் 2,000 'கிக்' தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர். இவர்கள் இ--ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20 ஆயிரம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ