உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திட்டப் பயனாளிகளுக்கு மானியம்; மாவட்ட தொழில் மையம் அபாரம்

திட்டப் பயனாளிகளுக்கு மானியம்; மாவட்ட தொழில் மையம் அபாரம்

கோவை; கோவை மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், நான்காண்டுகளில் பயன்பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும், அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், மாவட்ட தொழில் மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில் முனைவோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு முகாம்கள் நடத்தப்படுகின்றன.மாவட்ட தொழில் மையம் வாயிலாக, மத்திய, மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்பட்டு, மானியம் அளிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், திட்டங்களில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) வாயிலாக, 248 பேர் பயன்பெற்று, ரூ.89.95 கோடி கடனுதவி, ரூ.32.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், (பி.எம்.இ.ஜி.பி.,) பயனாளிகள் 482 பேருக்கு, 47.61 கோடிக்கு கடனுதவி, ரூ.15.87 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான, வேலை வாய்ப்பு உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி.,) திட்டத்தில், 369 பேர் பயன் பெற்று, 12.23 கோடி கடனுதவி, 4.37 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் (பி.எம்.எப்.எம்.இ) திட்டத்தில், 155 பேர் பயன்பெற்று, 11.11 கோடி ரூபாய் கடனுதவி, 5.98 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ