உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உளுந்து சாகுபடி ஊக்குவிக்க மானியம்

உளுந்து சாகுபடி ஊக்குவிக்க மானியம்

மேட்டுப்பாளையம்: உளுந்து சாகுபடியை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில், உளுந்து சாகுபடிக்கு மானியம் வழக்கப்படுகிறது.காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியிருப்பதாவது:-பயறு வகைகளில், உலக அளவில் மக்களிடையே உணவு பழக்கத்தில், மூன்றாவது இடத்தில் உளுந்து உள்ளது. உளுந்து சாகுபடி செய்து பயன்படுத்துவதால், மண்வளம் மேம்படுத்தப்படுகிறது. குறைந்த அளவு மழை உள்ள பகுதிகளில், உளுந்து பயிர் சாகுபடி செய்யலாம்.வி.பி.என்., 11 வகை உளுந்து பயிரை, 70 முதல் 75 நாட்களில் அறுவடை செய்யலாம். மானாவாரி பகுதிகளில் 865 கிலோ ஒரு எக்டருக்கும், இறவை சாகுபடியில் 940 கிலோ, ஒரு எக்டருக்கும் மகசூல் எடுக்கலாம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எல்லா பருவத்திலும் இந்த ரக உளுந்து விதைக்கலாம். மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.காரமடை வட்டாரத்தில் உளுந்து சாகுபடியை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில், உளுந்து செயல் விளக்க திடல் அமைப்பதற்கு ரூ. 8,500 ஒரு எக்டருக்கு வழங்கப்படுகிறது. மேலும் உளுந்து விதைகள் பொது விவசாயிகளுக்கு 200 கிலோ, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 கிலோ 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் உளுந்து சாகுபடி மேற்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை