மேலும் செய்திகள்
விநாயகர் கோயில் பால்குட விழா
18-Jan-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கொண்டேகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவிலில், மூன்றாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி அருகே, கொண்டேகவுண்டன்பாளையத்தில், பழமையான சர்க்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், கடந்த, 2022ல், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பாபிேஷகம் நடத்தப்பட்டது.இதன் மூன்றாமாண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பலரும், பிள்ளையார்பட்டி, சுவாமிமலை, பழநி மற்றும் பல்வேறு திருத்தலங்களிலிருந்து, புனித தீர்த்தம் எடுத்து வந்தனர்.நேற்று காலை, 7:40 மணிக்கு கணபதி ேஹாமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 16 வகையான அபிஷேகங்களாலும், புனித தீர்த்தங்களாலும் சர்க்கரை விநாயகரை குளிர்விக்கப்பட்டு, அலங்கார ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
18-Jan-2025