மேலும் செய்திகள்
தொகுப்பு வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு
30-May-2025
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில் கந்து வட்டி தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 30, ஆட்டோ டிரைவர். இவர், சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் விசாரணையில், கடன் தொல்லையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.விசாரணையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், சரவணன் வீடு கட்டுவதற்காக, கிணத்துக்கடவை சேர்ந்த சித்ரா என்பவரிடம், சிறிது சிறிதாக, 6 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார்.பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டவுடன், இவரது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தும், ஓட்டி வந்த ஆட்டோவை விற்பனை செய்தும் கடன் தொகையை செலுத்தி உள்ளார். மொத்தமாக, 20 லட்சம் ரூபாய் வரை திருப்பி செலுத்தியும், கடன் இருப்பதாக கூறி, டார்ச்சர் கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.போலீசார் கூறுகையில், 'இரு தரப்பினரிடையே விசாரணை செய்ததில், சுமூகமாக தீர்வு காண்பதாக தெரிவித்தனர். சரவணனிடம் பெற்ற காசோலை மற்றும் இதர ஆவணங்களை திரும்ப தருவதாக சித்ரா தரப்பில் தெரிவித்தனர்,' என்றனர்.
30-May-2025