மேலும் செய்திகள்
5 போலீஸ் ஸ்டேஷன்கள் மாவட்டத்தில் தரம் உயர்வு
08-Aug-2025
சூலுார்: கருமத்தம்பட்டி சப் -டிவிஷனில் எஸ்.ஐ., தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த இரு போலீஸ் ஸ்டேஷன்கள், தரம் உயரத்தப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ள, 400க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், மற்றொரு ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டரின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனால், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, விபத்து மற்றும் அவசர நிலைகளை கையாளுவதில் சிக்கல்கள், காலதாமதம் ஏற்ப்பட்டு வந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ள, ஸ்டேஷன்களை தரம் உயர்த்தி, இன்ஸ்பெக்டர்களை நியமிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கடந்த ஏப்., மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், போலீஸ் மானிய கோரிக்கையில், எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவர், என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழகத்தில், 280 ஸ்டேஷன்களுக்கு, இன்ஸ்பெக்டர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 13 போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப் பட்டுள்ளன. கருமத்தம்பட்டி சப் டிவிஷனுக்கு கீழ் உள்ள, செட்டிபாளையம், சுல்தான்பேட்டை ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. சூலுார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கீழ் செயல்பட்ட இந்த இரு ஸ்டேஷன் களுக்கும் விரைவில், தனித்தனியாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால், குற்ற சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகள், விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்பதால், மக்கள் திருப்தி அடைந்துள்ளனர்.
08-Aug-2025