மேலும் செய்திகள்
குறுவட்ட அளவில் தடகள போட்டிகள்
31-Jul-2025
சூலுார்; சூலுார் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கின. குடியரசு தினத்தை ஒட்டி, சூலுார் குறுமைய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள், கோவை வித்யா மந்திர் பள்ளி சார்பில், கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. சூலுார் வட்டாரத்தை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, கோவை வித்யா மந்திர் தாளாளர் பிரதேவ் ஆதிவேல், பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம், தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற மாணவ, மாணவியர், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இலக்கை அடைய கடும் உழைப்பை தந்தனர். இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் பவன்குமார், கமிஷனர் சரவண சுந்தர் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.
31-Jul-2025