மேலும் செய்திகள்
திண்டுக்கல்லை குளிர்வித்த மழை
12-Mar-2025
தொடரும் கனமழை சிறு விவசாயிகள் மகிழ்ச்சி
18-Mar-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பெய்த மழை, கோடை வெயிலின் தாக்கத்துக்கு இதமளிக்கும் வகையில் இருந்தது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் காலை, 11:00 மணிக்கு மேல் வெளியே செல்லும் போது குடை பிடித்தபடி செல்வதை காண முடிகிறது.பலரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, இளநீர், நுங்கு, தர்பூசணி, குளிர்பானங்களை பருக ஆர்வம் காட்டுகின்றனர். இரவு நேரங்களிலும் உஷ்ணம் அதிகரிப்பால், பொதுமக்கள் துாங்கமின்றி சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென கோடை மழை பெய்தது. ரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் ஓடியது. பல்லடம் ரோட்டில், மழைநீர் குளம் போல தேங்கி நின்றதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். கடும் வெப்பத்துக்கு இடையே மழை பெய்து, உஷ்ணம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
12-Mar-2025
18-Mar-2025