உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை விடுமுறை சைக்கிளிங் பயிற்சி

கோடை விடுமுறை சைக்கிளிங் பயிற்சி

கோவை; கோயம்புத்துார் சைக்கிளிங் அசோசியேசன் சாபில், கோடைகால இலவச சைக்கிளிங் பயிற்சி முகாம், 15 நாட்கள் நடக்கிறது.தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் மற்றும் கோயம்புத்துார் சைக்கிளிங் அசோசியேசன் சார்பில், எட்டு முதல், 18 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கான சைக்கிளிங் பயிற்சி முகாம், கோவைப்புதுார் சி.பி.எம்., கல்லுாரி அருகே நடக்கிறது.வரும், 4 முதல், 18ம் தேதி வரை, 15 நாட்களுக்கு நடக்கும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர், சைக்கிள், ஹெல்மெட் கொண்டு வர வேண்டும். காலை, 6:30 முதல் பயிற்சி வழங்கப்படுகிறது. முகாமில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான சைக்கிள் போட்டிகளுக்கு தயார் செய்யப்படுவர்.இதில், 8 முதல், 18 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம். விபரங்களுக்கு, 98947 89892, 95970 45393 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என, மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை