உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., தலைவர் தேர்வு

சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., தலைவர் தேர்வு

போத்தனூர்; கோவை, மாநிலம் முழுவதும், பா.ஜ., புதிய நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. அவ்வகையில் சுந்தராபுரம் மண்டல் தலைவர் தேர்வுக்காக, தீவிர உறுப்பினர்கள், 34 பேரிடம் கோட்ட பொறுப்பாளர் மோகன் மந்த்ராச்சலம், கடந்த மாதம் கருத்து கேட்டறிந்தார்.அதனடிப்படையில் நேற்று முன்தினம் குமரேசன், ஆர்.கோவிந்தராஜன் மற்றுமொரு கோவிந்தராஜன் ஆகியோர், தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டனர். மாநில தலைவர் அண்ணாமலை, தற்போதைய மண்டல தலைவர் முகுந்தனை, இரண்டாம் முறையாக, தேர்வு செய்து தகவல் அனுப்பினார்.அத்தகவல் கூடியிருந்த, 90க்கும் மேற்பட்ட இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகளிடையே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முகுந்தனுக்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், துணை தலைவர் முரளி உள்பட பலர் வாழ்த்து கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை