உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்காணிப்பு கேமரா மாயம் பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

கண்காணிப்பு கேமரா மாயம் பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், கண்காணிப்பு கேமராக்கள் காணாமல் போயுள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலுக்கு தினமும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சமூக விரோத செயல்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.இதில், மலையேற்ற பாதையின் நடுவே உள்ள முன்மண்டபத்தில், பக்தர்கள் ஓய்வெடுத்து செல்வது வழக்கம். இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா மண்டப தூண்களில் பொருத்தப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கேமரா மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. தற்போது, கேமராவே இல்லை.கண்காணிப்பு கேமரா இருந்ததால், சிலர் இங்கு அமர்வதை தவிர்த்து வந்தார்கள். ஆனால், தற்போது இங்கு கேமரா இல்லாததால், புகைபிடிப்பது, புகையிலை பொருட்கள் பயன்பாடு, மற்றும் மது குடிப்பது போன்ற செயல்கள் அரங்கேறுகின்றன. இதனால், இப்பகுதியில் பக்தர்கள் அமர அச்சப்படுகின்றனர்.எனவே, பக்தர்கள் பாதுகாப்பு கருதி, இங்கு மீண்டும் கண்காணிப்பு கேமரா அமைக்க கோவில் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ