உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேர் வாடல், வெள்ளை ஈ தாக்குதல் கணக்கெடுப்பு

வேர் வாடல், வெள்ளை ஈ தாக்குதல் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னையில் வேர் வாடல் நோய், வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் குறித்து, அதிகாரிகள், வேளாண் பல்கலை மாணவர்கள் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னையில் வேர் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள், மரங்களை வெட்டி வருகின்றனர்.இந்நிலையில், தென்னையில் வேர் வாடல் நோய் குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அதன்பின் நடந்த கருத்தரங்கிலும் இந்த ஆய்வை முறையாக மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகள், வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முதல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனைமலை பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை, வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர்.அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 16,500 ெஹக்டேர், தெற்கில், 10,800 ெஹக்டேர், ஆனைமலையில், 22,068 ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேர் வாடல் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து, தெற்கு, 30, வடக்கு, 48, ஆனைமலை, 19 கிராமங்களில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.கணக்கெடுக்க வரும் மாணவர்களிடம், பெயர், தந்தை பெயர், தென்னை ரக வாரியாக சாகுபடி பரப்பு, பூச்சி நோய் தாக்கிய விபரம், வெட்டி அகற்றப்பட்ட மரங்கள், ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றும் இப்பணிகள் நடக்கிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ