உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  லட்சுமி நரசிங்க கோயிலில் மார்கழி மாத சுவாதி ஹோமம்

 லட்சுமி நரசிங்க கோயிலில் மார்கழி மாத சுவாதி ஹோமம்

மேட்டுப்பாளையம்: -: இலுப்பநத்தத்தில் உள்ள லட்சுமி நரசிங்க கோயிலில், மார்கழி மாத சுவாதி ஹோமம் நடந்தது. சிறுமுகை அடுத்த இலுப்பநத்தத்தில் லட்சுமி நரசிங்க பீடம்- ஆபந்பாந்தவ நரசிம்மப் பெருமாள், தாயாவல்லித்தாயார் கோவில் உள்ளது. நேற்று கோவிலில் மார்கழி மாத சுவாதி யாகம் மற்றும் லோக சேம ஹோம வைபவம் நடந்தது. காலையில் கோவில் நடை திறந்து திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருப்பல்லாண்டு பாடப்பட்டது. பின்பு விஸ்வக்ஷேனர் பூஜை, புண்யாவசனம், கலச ஆவாகனம், பஞ்ச சுத்த ஜபம் நடந்தது. லோக சேமத்திற்கும், சுதர்சன ஹோமம், நரசிம்ம ஹோமம், லட்சுமி காயத்ரி ஹோமம், கருட, ஆஞ்சநேய ஹோமம், திருமண தோஷ நிவர்த்தி ஹோமம், புத்திரதோஷ நிவர்த்தி ஹோமம், நவகிரக தோஷ நிவர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தன. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவிய தீர்த்த அபிஷேகம், வேத பாராயணம், உபநிஷத் அஷ்டோத்திரம் செய்யப்பட்டது. பின்பு சாற்று முறை சேவிக்கப்பட்டது. விழாவில், டி.ஜி.பு தூர் சீனிவாச பெருமாள் பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோபூஜையும், இரவு ஏகாந்த சேவையுடன் வைபவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை