டேக்வாண்டோ; வீரர்கள் ஆக்ரோஷம்
கோவை, - பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'டேக்வாண்டோ' போட்டியில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி முதலிடம் பிடித்தது.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 'டேக்வாண்டோ' போட்டிகள், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்துவருகின்றன. நேற்று முன்தினம் ஆண்களுக்கான போட்டிகள் நடந்தது.கொரிய தற்காப்பு கலையான இந்த 'டேக்வாண்டோ' போட்டிகளை கல்லுாரி செயலாளர் வாசுகி துவக்கிவைத்தார். இதில், 54, 58, 63, 68, 74, 80, 87 கிலோ எடை என எட்டு பிரிவுகளில், 60 வீரர்கள் கலந்துகொண்டனர். வீரர்கள் ஆக்ரோஷகமாக மோதிக்கொண்ட விதம் பார்வையாளர்களிடம் கரகோஷம் எழுந்ததுடன், ஆரவாரம் செய்தது வீரர்களை உற்சாகப்படுத்தியது. அதிக வெற்றிகளை குவித்த பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி ஒட்டுமொத்த 'டிராபி'யை வென்றது.இரண்டாம் இடத்தை கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி அணி வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர்(பொ) ராஜேஸ்வரன் பரிசு வழங்கினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் கவிதாஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, பெண்களுக்கான போட்டிகள் நேற்று முதல் நடந்துவருகிறது.