தாசில்தார் பொறுப்பேற்பு
அன்னுார்; அன்னுார் தாலுகா அலுவலகத்தில், குடிமை பொருள் தாசில்தாராக பணிபுரிந்து வந்த செல்வி, பொள்ளாச்சி டாஸ்மாக் கிடங்கு தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தாசில்தார் ஜெயபாரதி, அன்னுாருக்கு மாற்றப்பட்டு, அன்னுார் தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் தாசில்தாராக பொறுப்பேற்றார்.